தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல, இது நமக்கு தலைகுனிவு என்று ’தமிழைத் தேடி’ பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன “தமிழை தேடி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ்தான் கட்டாய பயிற்று மொழி உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு இந்த பயணத்தை தொடங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் வீதியில் மருத்துவர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அண்மைச் செய்தி: அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?
அப்போது பேசிய டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ”தமிழைத் தேடி என்கின்ற வார்த்தை பெருமைப்படக்கூடியது அல்ல, தமிழை தேடி என்பது அவமானப்படக்கூடியது. நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டோம். தமிழ் எங்குமே இல்லை ” என்று தெரிவித்தார்.







