மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை சாத்தியம் இல்லை -அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்பதில் சாத்தியம் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மற்றும்…

மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்பதில் சாத்தியம் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டம் மேற்படிப்பு இட ஒதுக்கீடு ஆணையை வழங்கிய, பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அரசு ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259 உள்ளன என்றார்.

அதேபோல, 26 தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதில் மொத்தம் 1660 இடங்கள் உள்ளன, அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும், அரசு ஒதுக்கிட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. மேலும், இதுவரை பெறப்பட்ட அரசு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 2756, அதில் தகுதியான விண்ணப்பங்களாக 2573, தரவரிசையில் பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 580, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 878 விண்ணப்பங்கள், தகுதியான விண்ணப்பங்கள் 812, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் 474 என்றார். யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பிற்குப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 282, தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 281, நுழைவு தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 270, நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 93 என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சுகாதாரத்துறையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடியல் பெற்றுள்ளனர். விருப்பத்திற்கேற்ப வெளிப்படைத்தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. சுகாதாரத்துறையில் 136 வது அறிவிப்புகளை அறிவித்துள்ளது, இதன் செயல்பாடுகள் புத்தகமாக வெளியிடப்படும் என்ற அவர், இந்த 136 அறிவிப்புகளுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்றார்.

சித்த பல்கலைக்கழகத்திற்கான ஒப்புதலுக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில கேள்விகள் கேட்டு அரசுக்குக் கடிதம் அனுப்பினால் ஆளுநர், அதற்கும் பதிலளித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்ற அவர், சித்த பல்கலைக்கழகத்திற்காக மாதவரம் பகுதியில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், இதுவரையும் கண்டுகொள்ளாத பிரிவாக சித்தா பிரிவு இருந்து வந்தது என்றார். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கியதும் புதிய பாடப் பிரிவு துவங்கப்படும் எனவும், சித்த மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை, இந்த புகாருக்கு உரிய விசாரணை நடத்தி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.