”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் போர் மூளும் சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதி மற்றும் அல்…

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் போர் மூளும் சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதி மற்றும் அல் அக்சா பள்ளிவாசலை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து வருவதாக பாலஸ்தீனம் குற்றம் சாட்டிய நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள அமைப்புகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இதற்கிடையே நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் அமைப்பினர்  நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் திடீர் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. அவர்கள் இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்ததாகவும், 20 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்குப் பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் இராணுவம் காசா மீது தொடர்ந்து  தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில். தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, பதிலடி கொடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை பாலஸ்தீனத்தில் 200க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் மற்றும் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே தீவிரமாக போர் நடைப்பெற்று வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆனையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த 15 பேர் மற்றும் கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் தொடர்புக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுக்காப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் தொடர்பில் உள்ளனர்.

மேலும் தமிழக அரசு சார்பில் இஸ்ரேல் போர் பிரச்னை தொடர்பாக தமிழர்கள் தொடர்பு கொள்ள மூன்று தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.போரில் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட இந்த தொலைபேசியில் தொடர்புக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8760248625.
9940256444
9600023645

மேலும் இ-மெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது.

nrtchennai@tngovt.in
nrtchennai@gmail.com.

அதேபோல் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அயலக தமிழக நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு பாதிப்பு என்றால் உதவி செய்து உடனடியாக மீட்க முடியும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டுக் கொண்டார்.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News 7 tamil – ன் WhatsApp – ல் இணைய!

https://whatsapp.com/channel/0029Va6Hv3M4tRrwjJ2hPo0O

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.