இஸ்ரேலை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீது கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலை…

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலஸ்தீனத்தின் மீது கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி
வருகிறது.  இந்த தாக்குதலை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை கும்பகோணம் பழைய மீன் அங்காடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளை கண்டித்தும்,  பாலஸ்தீனம் காசா நகரில் மின்சாரம்,  எரிவாயு, தண்ணீர்,  உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை தடுத்து நிறுத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  மேலும் போர் வரைமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.