மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார் என தேவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்தார் அதன் பின்பு செய்திகளிடம் தெரிவித்ததாவது..
“அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் தேவர் திருமகனார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேவரின் திருவுருவப்படத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திறந்து வைத்தார்
மக்கள் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 13.50 கிலோ தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செய்தார். சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையும் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அமைக்கப்பட்டது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







