ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது. ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம். ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது”என்று குற்றம்சாட்டி உள்ளார். இதற்கிடையே, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.







