“காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.  கடந்த அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு…

காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

கடந்த அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  இதில், 4,237 பேர் குழந்தைகள்.  கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.

இந்நிலையில் காஸாவில் தினந்தோறும் 4 மணி நேரம் தாக்குதல் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் அறிவித்ததாக செய்தி வெளியானது. இது  தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“பாலஸ்தீனத்தை மீண்டும் கைப்பற்றும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை.  போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது.  ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கென தனி கால அட்டவணை எதுவும் கிடையாது.  இஸ்ரேல் ராணுவம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.  எவ்வளவு நாட்கள் ஆகுமோ அது வரை நாங்கள் போரிடுவோம்.  காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை.  நாங்கள் ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கவில்லை, காஸாவுக்கும் எங்களுக்கும் நிரந்தர எதிர்காலம் அமைக்கவே முயற்சி செய்து வருகிறோம். காஸாவில் மக்கள் அரசை வரவேற்கிறோம்.

போரின் வெற்றிக்குப் பிறகு காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் படை எப்போதும் தயாராக இருக்கும். ஹமாஸ் போன்ற குழு மீண்டும் உருவாவதைத் அந்த படை தடுக்கும்”.  இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் நெதன்யாகு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.