ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை இஷா அம்பானி வென்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2022 ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 45 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தனது மகளான இஷா அம்பானியை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் தலைவராக அறிவித்தார்.
கிட்டதட்ட 65லட்சம் கோடி இந்திய மதிப்பில் தனது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தை நடத்தி வரும் இஷா சமீபத்தில் “ஜியோ மார்ட்” எனும் நிறுவனத்தை தொடங்கினார். அதன் நோக்கம் இந்திய தயாரிப்பை ஊக்குவிப்பது எனவும் அந்நிறுவனம் பிரச்சாரம் செய்தது.
இதனையும் படியுங்கள் : ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை விளக்கும் புத்தகம் – மகனுக்காக தயாரித்த ஜப்பான் தாய்
இந்த நிலையில் வெள்ளிக் கிழமை அன்று நடந்த போர்ப்ஸ் இந்தியா நிறுவனத்தின் விருது விழாவில் ‘அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர்’ (GenNext Entrepreneur) எனும் விருதை இளம் தொழிலதிபரான் இஷா அம்பானிக்கு வழங்கியது. பிரபலமாக அறியப்படும் வர்த்தகம் தொடர்பான இதழான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் ஆண்டுதோறும் தலைமைத்துவத்தில் சிறந்த விளங்குவோருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் விருதை பெற்றுக் கொண்ட இஷா அம்பானி, அந்த விருதை தனது பெற்றோர்களான முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் குழந்தைகளான ஆதியா ஷக்தி கிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்து சமர்பித்தார். இந்த விருதினை ஆஸ்கர் விருதினை பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் தயாரிப்பாளரான குனீத் மோங்கா வழங்கி கவுரவித்தார்.







