ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை விளக்கும் புத்தகம் – மகனுக்காக தயாரித்த ஜப்பான் தாய்

ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை விளக்கும் விதமாக ஓவியங்களுடன் கூடிய  புத்தகம்  ஒன்றை மகனுக்காக ஜப்பான் தாய் ஒருவர் தயாரித்துள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில்…

ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை விளக்கும் விதமாக ஓவியங்களுடன் கூடிய  புத்தகம்  ஒன்றை மகனுக்காக ஜப்பான் தாய் ஒருவர் தயாரித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆலியாபட் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு பல்வேறு விருதுகள் குவிந்து வந்தன. அந்தவகையில் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்த பாடல் பெற்றதையடுத்து ஆஸ்கர் விருதுக்கு இந்த பாடல் நாமினேஷன் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு  நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் திரைபிரபலங்கள், அதிகாரிகள் என பலரும் இந்த பாடலில் வருவது போன்று நடனமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மகனுக்காக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் கதையை விளக்கும் புத்தகத்தை தாய் வடிவமைத்துள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  ஆர்.ஆர்.ஆர்  படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்ற பிறகு, இப்படம் உலக அளவில் கவனம் பெற்றது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் மகனுக்காக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் கதையை விளக்கும் புத்தகத்தை ஓவியங்களுடன் தயாரித்துள்ளார். தனது 7 வயது மகன் 3 மணிநேர திரைப்படத்தை சப்டைட்டிலுடன்  பார்ப்பது கடினமாக இருக்கும் என அவர் நினைத்ததால் இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைத்துள்ளார்.

இந்த வீடியோ கடந்த ஜனவரி மாதமே #RRRinJapan என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.