This News Fact Checked by ‘AajTak’
மீரட்-டேராடூன் நெடுஞ்சாலை என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது. இதைப் பகிர்ந்தவர்கள் இது மீரட்-டேராடூன் நெடுஞ்சாலை என்று கூறுகிறார்கள். இது உ.பி.யில் நடக்கும் வளர்ச்சியை காட்டுவதாக மக்கள் கூறுகின்றனர்.
மலைகள் வழியாக கட்டப்பட்ட அற்புதமான ஆறுவழி விரைவுச்சாலையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை ஷேர் செய்து, இது மீரட்-டேராடூன் நெடுஞ்சாலை என்று கூறி வருகின்றனர். இது உ.பி.யில் நடக்கும் வளர்ச்சியை காட்டுவதாக மக்கள் கூறுகின்றனர். ஃபேஸ்புக் பயனர் ஒருவர் புகைப்படத்துடன், “இந்த நாளின் படம். உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் – டேராடூன் நெடுஞ்சாலையின் காட்சி. புதிய “உத்திரப் பிரதேசம்” தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது.” என பதிவிட்டுள்ளார்.
ஆனால், வைரலாகிவரும் இந்த படம் மீரட்-டெஹ்ராடூன் நெடுஞ்சாலையின் புகைப்படம் அல்ல, சீனாவின் ஷோகுவான்-சின்ஃபெங் எக்ஸ்பிரஸ்வேயின் புகைப்படம் என்று ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான புகைப்படத்தைத் தலைகீழாகத் தேடும்போது, மார்ச் 1, 2024 தேதியிட்ட ட்விட்டர் (எக்ஸ்) பதிவு ஒன்று கிடைத்தது. பதிவின் படி, இந்த நெடுஞ்சாலை சீனாவில் கட்டப்பட்டது. இந்த புகைப்படம் சீனாவின் ஊடக அமைப்பான சைனா டெய்லியின் அறிக்கையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த புகைப்படம் சீனாவின் குவாங்டாங்கில் கட்டப்பட்ட ஷாவோகுவான்-சின்ஃபெங் விரைவுச்சாலையின் புகைப்படமாகும், இது சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளது.









