Fact Check : திரிணாமுல் கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிட்ட புகைப்படம் உண்மையா?… பின்னணி என்ன?

This News was Fact Checked by Boom திரிணாமுல் (டிஎம்சி) கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   சமீபத்தில், நெட்டிசன்களால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், ஒரு…

This News was Fact Checked by Boom

திரிணாமுல் (டிஎம்சி) கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சமீபத்தில், நெட்டிசன்களால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், ஒரு வீட்டின் வாசலில் உள்ள பேனரில் திரிணாமுல் (டிஎம்சி) கட்சியினரை நாயுடன் ஒப்பிடுவது போன்ற அப்படத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வைரலான படத்தில்,  ஒரு பெரியவர் ஒரு பேனருக்கு பக்கத்தில் நிற்பதைக் காணலாம். வாசலில் தொங்கும் பேனரில்,  “திரிணாமுல் கட்சியினர் மற்றும் நாய்களுக்கு அனுமதி இல்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

தற்போதைய மக்களவை தேர்தல் சூழலில்,  இந்த போலியான புகைப்படம் பல்வேறு தலைப்புகளுடன் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.  ஒரு பயனர் வைரலான பதிவைப் பகிர்ந்துகொண்டு,  “என்னைப் பொறுத்தவரை திரிணாமுல் தலைவர்களை விட நாய் மதிப்புமிக்கது.  நாய்கள் மக்களுக்கு நன்மை செய்கின்றன,  திரிணாமுல் கட்சியினர் மக்களுக்கு தீங்கு செய்கிறார்கள்” என்று தலைப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் அதே படத்தை வெளியிட்டு, “இது யாருடைய வீடு? அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று தலைப்பிட்டுள்ளார்.

புகைப்படத்தின் உண்மை பின்னணி:

வைரல் படத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க ரிவேர்ஸ் இமேஜ் செய்து தேடிய போது சமூக ஊடக இடுகையில் அசல் படத்தைக் கண்டறிந்தது . 2017 ஆம் ஆண்டில் X தள பக்கத்தில் மகாராஷ்டிராவின் சந்திராபூரில் எடுக்கப்பட்ட அசல் புகைப்படத்தில் உள்ள பேனரில்,  வீட்டில் மூன்று முறை திருடப்பட்டதாகவும்,  திருடனை வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் மராத்தி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் மூல்ம் இந்த புகைப்படம் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Note : This story was originally published by ‘Boom’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.