அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள முதலீடு தொடர்பாக தன்னுடன் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு பெறப்பட்டுள்ளது என்றும், ஒரு லட்சத்து 64 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் எனவும் கூறினார்.
மேலும், தொழில்துறை பற்றியும், தொழில் முதலீட்டாளர் மாநாடு குறித்தும் விவாதம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் தாயாரா? என அமைச்சர் சவால் விடுத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசும் ஸ்டாலினுக்கு, கிராம சபை கூட்டம் எதற்கு? என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பினார்.







