மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை மெரினா கடற்கறையில், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை, வரும் 27ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க இருப்பதாகவும், சட்டசபை தலைவர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







