பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்குடைய மரணம் உயிரிழப்புஅல்ல, கொலை தான் என பரபரப்பு தகவலை மருத்துவமனை பிணவறை ஊழியர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். என்ன நடந்தது? அவர் அப்படி சொல்வதற்கு காரணம் என்ன பார்க்கலாம்.
இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம்நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் நடித்த எம்.எஸ். தோனி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற திரைப்படம். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர்உயிரை மாய்த்துக் கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே மும்பை போலீசார் சுஷாந்த் சிங் உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் உயிரை மாய்த்துக் கொண்டாரா? என்ற கோணத் திலும் காவல் துறை நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக அவர் வாரிசு நடிகர்கள், பெரிய நடிகர்களின் தலையீட்டால் படவாய்ப்புகளை இழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடமும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சுஷாந்த் சிங் வழக்கை மத்திய அரசு அதிரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. சுஷாந்த் சிங் மரண வழக்கை சந்தேக மரண வழக்காக விசாரித்து வருகின்றனர்.
ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் ரியா சக்கரவர்த்தி, சித்தார்த் பிதானி மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாகவும், பயன்படுத்தியதாகவும் கூறி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்தது. அந்த வழக்கின் விசாரணையும் தற்போது நடந்து வருகிறது. சுஷாந்த் சிங் மரணம் அடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் சுஷாந்த் சிங் உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் விலகாத நிலையில் மீண்டும் சர்ச்சை கிளம்பிய உள்ளது.
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனையில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். சுஷாந்த் சிங்கை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் ஷா இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணத்தில் இருந்த மர்மங்கள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
“சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, கூப்பர் மருத்துவமனையில் ஐந்து உடல்களை பிரேத பரிசோதனை செய்தோம். ஐந்து உடல்களில் ஒன்று விஐபியின் உடல். பிரேத பரிசோதனை செய்த போது, சுஷாந்த் சிங் இறந்துவிட்டதாகத் தெரிய வந்தது. உடலில் பல தடயங்கள் இருந்தன” என்று மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் ஷா சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.
மேலும், “சுஷாந்த் சிங் கழுத்தில் இரண்டு மூன்று அடையாளங்கள் இருந்தது. பிரேதப் பரிசோதனையை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் உடலின் படங்களை மட்டும் கிளிக் செய்யுமாறு கூறினர். சுஷாந்தின் உடலை முதன் முதலில் பார்த்த போது அது உயிரிழப்பு அல்ல கொலை என்று நினைத்தேன். இதை உயர் அதிகாரிகளிடம் சொன்னேன். நான் விதிகளின்படி வேலை செய்ய வேண்டும். புகைப்படத்தை கிளிக் செய்யும் படி மூத்த அதிகாரி கூறியதாக” மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் ஷா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “உடலை விரைவில் பிரேத பரிசோதனை செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதனால் இரவில் பிரேத பரிசோதனை செய்ததாகவும், இது உயிரிழப்பு இல்லை, கொலை எனவும்” கூறியுள்ளார். “சுஷாந்த் உடல் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், கை, கால்கள் உடைந்த நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை, அது சாத்தியமற்றது” என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் ஷா தெரிவித்துள்ளார்.
#WATCH | "When I saw Sushant Singh Rajput's body it didn't appear to be a case of suicide. Injuries marks were there on his body. I went to my senior but he said we will discuss it later," says Roopkumar Shah, Mortuary Servant, Cooper Hospital, Mumbai pic.twitter.com/NOXAsaI8uH
— ANI (@ANI) December 26, 2022
மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி உள்ளது. கூப்பர் மருத்துவமனையின் பிணவறையில் பணியாற்றி வந்த ரூப் குமார் ஷா ஓய்வு பெற்ற பிறகே சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.