முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுமி டானியாவுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை; தொலைப்பேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு மேலும் ஒரு அறுவைசிகிச்சை. தொலைப்பேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா ஆறரை வருடங்களாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா
மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு முக
சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்து சாதாரண
வார்டுக்கு மாற்றப்பட்ட சிறுமி டானியாவை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம்
விசாரித்தார்.


அதனைத் தொடர்ந்து 25 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி
வீடு திரும்பினார். இந்நிலையில் சிறுமி டானியா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக நேற்று ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமி டானியாவிற்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள
கண் மூடுவதற்கு சிரமபடுவதாலும், சாப்பிடுவதற்கு வாய் திறக்க அவதிப்படுவதாலும்
இந்த அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தற்போது சிறுமி டானியா சில நாட்கள் மருத்துவரின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இன்று தமிழக அமைச்சர் நாசர் சிறுமி டானியாவை சந்தித்து நலம்
விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நாசரின் அலைப்பேசி வாயிலாக வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சரிடம் நிலவரம் கேட்டுவிட்டு சிறுமி டானியா விடம் பேசினார். அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு தேர்வு நன்றாக எழுதினாயா என்று கேட்டார். அதற்கு டானியா இல்லம் தேடி கல்வி மூலம் நல்ல முறையில் தேர்வு எழுதினேன் என்று கூறினார்.

பிறகு டானியா அம்மா சௌபாக்கியாவிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தெரிவித்துவிட்டு பயப்படாமல் தைரியமாக இருங்கள் என்று கூறினார்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேசிய சம்பவம் மருத்துவமனையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான மனு-அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

G SaravanaKumar

முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

EZHILARASAN D

ஈரோடு இடைத்தேர்தல் – பாஜகவின் முடிவு என்ன? அதிமுக கூட்டணி விரிசல்?

Web Editor