2 ஆண்டுகள் ஆகியும் மர்மம் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணம்?

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அவரது மரணம் தொடர்பான காரணங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.  பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 202ம் ஆண்டு ஜூன்…

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அவரது மரணம் தொடர்பான காரணங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 202ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இன்றுடன் அவர் உயிரிழந்து 2 ஆண்டுகள் ஆகிறது.

ராஜ்புத்தின் மரணம் குறித்து தந்தை கேகே சிங், ஜூன் 25 அன்று தனது காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் மீது பாட்னா காவல்துறையில் புகார் அளித்தார். முதலில் இதைப் பார்த்த மும்பை போலீஸாருக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இந்த வழக்கை மும்பை காவல்துறை, பிகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (NCB), அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. பின்னத் இந்த மரணத்தை சதி கோணத்தில் விசாரிக்க வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, பாலிவுட் நடிகையும் சுஷாந்தின் காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த், அவரது சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோரிடம் இருந்து சிபிஐ வாக்குமூலம் பெற்றது. சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா? என்பதை அறிய ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை கடந்த 2020ம் ஆண்டு சிபிஐ-யிடம் சமர்பித்தனர். அதில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது உயிரிழப்பு தான். கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியாக அவரது உடலில் வேறு எந்த தடயங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுஷாந்த் உயிரிழந்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை எட்டப்படாதது ஏன் என்று இன்னும் தெரியவில்லை. சுஷாந்தின் ரசிகர்கள் பலரும் சிபிஐ-யின் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.