36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.120 டிக்கெட் 1,000ரூபாவா? கொந்தளித்த அஜித் ரசிகர்கள்

வலிமை திரைப்பட டிக்கெட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்  என அஜித் ரசிகர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொங்கல் நெருங்கி வரும் நிலையில் திரைப்படத்தை திரையிடும் பணிகள் தீவிரமாகி வருகின்றன. இந்நிலையில், வலிமை திரைப்பட டிக்கெட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க கோரி அஜித் ரசிகர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான முன்பதிவு இதுவரை துவங்காத நிலையில், ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சிகளை திரையிடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், ரூ.120 மதிப்புடைய டிக்கெட்டுக்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்க வேண்டும் என திரையரங்க நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துவதாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

காட்சிக்கு, சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே என்பதற்கு பதிலாக திரையரங்க உரிமையாளர்கள் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கேட்பதாகவும், இதனால் ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மனுவில் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading