செங்கல்பட்டு அருகே இருளர் சமுதாய மக்கள் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புளிப்பரகோயில், நடராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் அவர்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாமலும், பல்வேறு சலுகைகளைப் பெற முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
மேலும் சாதிச் சான்றிதழ் கேட்டு மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனுகொடுத்துள்ளனர். ஆனாலும் கடந்த எட்டு ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.








