முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தியா மிகப்பெரிய சோதனை கட்டத்தில் உள்ளது – திருச்சி சிவா

இந்தியா மிகப்பெரிய சோதனை கட்டத்தை சந்தித்துள்ளதாக நாடாளுமன்ற  உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் இரு அவைகளும் முடங்கின.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, இந்தியாவில் பொருளாதாரம் சிதைந்துள்ளதால், நாடு மிகப்பெரிய சோதனை கட்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தார். மேலும்,  நாடாளுமன்ற நெறிமுறைகளை கடைபிடிப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறினார். கடந்த ஆட்சியில், பிரச்னைகள் குறித்து அனைவரும் விவாதித்து தீர்வு காண்பதே வழக்கமாக இருந்ததாக தெரிவித்த அவர், தற்போதைய அரசு தனது தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொள்வதாகவும் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொருளாதார பின்னடைவு மற்றும் பெகாசஸ் தொடர்பாக விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்த அவர்,  இதனால்தான் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் கடமையாற்ற விரும்புவதாகவும் கூறினார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் பதில் அளிக்க வேண்டும் என கூறிய திருச்சி சிவா, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் அவைக்கே வருவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

 

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 20 நிறுவனங்கள் விருப்பம்!

Saravana Kumar

நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்

Ezhilarasan

பாடலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்

Saravana Kumar