ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழப்பு!

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தாக ஈரானிய ஊடகங்கள் தகவல் ததெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. டெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதற்கு சாத்தியமான நிறைய அறிகுறிகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், காமேனி கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் தலைமை மதகுரு காமேனி உயிரிழந்து விட்டதாக ஈரானிய உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரனும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் காமேனி உயிரிழந்ததை அடுத்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.