“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத திறனற்ற அரசாக தவெக செயல்படுகிறது” – எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி நிர்வாக திறன் இல்லாத ஆட்சியாக உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பிற மாநிலங்களில் வளர்ச்சி குறைவாக இருந்தும் ஜிஎஸ்டி அதிகமாக வளர்ந்துள்ளதாகவும் தமிழகத்தில் வளர்ச்சி அதிகமாக இருந்தும் ஜிஎஸ்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

விலை வாசி உயர்வு குறித்து கேட்ட பொழுது, முதலமைச்சர் எங்கெல்லாம் இடைத்தேர்தல் வருகிறதோ அங்கெல்லாம் சென்று நல உதவி திட்டங்களை வழங்கி வருகிறார். ஒவ்வொரு முறையும் ஊடகத்தின் வாயிலாகவும், பொதுக்கூட்டம் வாயிலாகவும் பேசிக்கொண்டு வருகிறோம். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ஜோசப் விஜய் முதலமைச்சரான பிறகு ஆறு மாத காலத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

அரிசி 20 லிருந்து 25 ரூபாய் உயர்ந்துள்ளது, இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சர்க்கரை விலை ஒரு கிலோ 25 ரூபாய் உயர்ந்துள்ளது, பருப்பு, எண்ணெய், புளி, மளிகை சாமான்கள் அனைத்தும் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தீபாவளி காலங்களில் இது போன்ற விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆவின் தயாரிப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத திறனற்ற அரசாக செயல்படுகிறது. இந்த கோளாறுகளை சரிசெய்ய எதுவும் செய்யாமல் வேறு ஏதேனோ தேவையில்லாத விஷயங்களை பேசி காலத்தை வீணடிக்கிறார்கள். தமிழக வெற்றி கழகம் ஆட்சி நிர்வாக திறன் இல்லாத ஆட்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.