#IPL2026 | மும்பை – ஐதராபாத் அணி இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 41-வது லீக் ஆட்டத்தில், இன்று மும்பை அணி, ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 41-வது லீக் ஆட்டத்தில், இன்று மும்பை அணி, ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் 103 ரன் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மறுபுறம், 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் எழுச்சி பெற்றுள்ள ஐதராபாத் அணி அபாரமான பார்மில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 15 முறையும், ஐதராபாத் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.