#IPL2026 | லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, லக்னோ அணிகள் மோதியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு, லக்னோ அணிகள் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.

அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 40 ரன்களும், முகுல் சௌத்ரி 39 ரன்களும், ஆயுஷ் பதோனி 38 ரன்களும் அடித்தனர். சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணியில் ராசிக் சலாம் 4 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுளையும், குருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. இறுதியில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.