#IPL2026 | மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி!

மும்பையை வீழ்த்தி 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 41-வது லீக் ஆட்டத்தில், நேற்று மும்பை அணி, ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து, அபிஷேக் சர்மாவும் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 45(24) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். போட்டியின் இறுதியில் 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.