#IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – குஜராத் அணிகள் மோதியது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா 2 ரன்னிலும், ப்ரப்சிம்ரன் சிங் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கில் மற்றும் சுதர்சன் களமிறங்கியநிலையில், கில் 5(4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
போட்டியின் முடிவில் குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.