19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணி மோதுகிறது.
இந்த இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே மும்பைக்கு ‘பிளே-ஆப்’ செல்ல சின்ன வாய்ப்பு உள்ளது. லக்னோ அணி முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற அந்த அணி, அடுத்த 5 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியைத் தழுவியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது







