தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் திமுக, தவெக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. நடப்பு தேர்தலில் தமிழகத்தில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கேரள தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) பாஜக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அசாம் தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, தவெக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்க்கு 148 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என 3 முனை போட்டி நிலவுகிறது.







