#IPL2026 | லக்னோவை எதிர்கொள்ளும் டெல்லி ; வெற்றி யாருக்கு…?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் லக்னோ அணியை ரிஷப் பண்டும், டெல்லி அணியை அக்சார் பட்டேலும் வழி நடத்துகின்றனர்.

நேருக்கு நேர்

ஐபிஎலில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இதுவரை மொத்தம் 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 போட்டிகளில் டெல்லியும், 3 போட்டிகளில் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த சீசன்

கடந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த டெல்லி, ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிளேஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது. அதே போல 14 லீக் ஆட்டங்களில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்ற லக்னோ அணியும் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தையே பிடித்தது.

உத்தேச அணி விவரம் :

லக்னோ : மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், ரிஷப் பந்த் (C & WK ), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், அன்ரிச் நார்ட்ஜே, முகமது ஷமி, அவேஷ் கான், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி.

டெல்லி : பாத்தும் நிசாங்கா, கே.எல். ராகுல் (WK), நிதிஷ் ராணா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்சர் படேல் (C), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், ஔகிப் நபி, குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.