GOLD RATE | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன……?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது.

தங்கம் விலையானது, கடந்த சில நாட்களாக ஏற்ற – இறக்கங்களை கண்டு வருகிறது.

அதன் படி நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13.670-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,050-க்கும், சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.