#IPL2026 | பஞ்சாப் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி!

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது.

இந்த நிலையில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி பதும் நிசங்கா, கே.எல்.ராகுல் ஜோடி 28 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து கே.எல்.ராகுலுடன் நிதிஷ் ராணா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. 2வது விக்கெட்டுக்கு 220 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 91 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 264 ரன்களைக் குவித்தது. கே.எல்.ராகுல் 152 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.