“நானும் உடன்படுறேன்”- மகளின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு…!

திருமணம் தொடர்பான ஊட்டச்சத்து நிபுணர் திவ்யாவின் பேச்சுக்கு நடிகரும் அவரது தந்தையுமான சத்யராஜ் அதரவு அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாப்பாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். பெரியாரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. திமுக நிர்வாகியான இவர் ஊட்டச்சத்து நிபுணரான உள்ளார். இந்த நிலையில் திவ்யா சத்யராஜ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் “திருமணம் செய்த பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு முழு ஒப்புதல் உள்ளது” என கூறினார்.

திவ்யா சத்யராஜின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நான் ஒரு தீவிர பெரியாரியவாதி. ஜாதி-மத சடங்குகளில் தனக்கு உடன்பாடில்லை. திருமணம் என்பது ஒரு தனிநபர் விருப்பம். இன்றுள்ள மருத்துவ வசதிகளை பயன்படுத்தி திருமணம் இன்றியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். மகளின் முற்போக்கான கருத்துகளுடன் நானும் ஒத்து போகிறேன், உடன் படுகிறேன்” என  கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.