#IPL2026 | டெல்லி – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை!

35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 17-ல் வெற்றி பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்ததில், 13-ல் ஐதராபாத்தும், 9-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.