தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா. காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டியதையடுத்து அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த கவிதா, ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ஐதராபாத் அருகே முனீர்பாத் பகுதியில் உள்ள ஒரு அரங்கில் கவிதா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். “தெலுங்கானா ராஷ்டிர சேனா” (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.




