19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 27-வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்தத் போட்டியின் தொடக்கத்தில் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளிடம் தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னை அணி, அடுத்தடுத்த போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தி தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக, காயம் காரணமாக இதுவரை விளையாடாத எம்.எஸ். தோனி, இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை 15 முறையும் ஐதராபாத் 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன.







