ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. 2008- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள் ளது. 14- வது ஐபிஎல் தொடர், இந்தியாவில் கடந்த ஆண்டு தொடங்கியது. பாதிப் போட்டி கள் நடைபெற்ற நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நிறுத்தப்பட்ட இந்த தொடர், பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த தொடருடன் வீரர்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்தது.
இதனால் அணிகள் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் மற்றவர் களை ஏலத்துக்காக விடுவிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். தக்க வைக்கப்பட்ட வீரர்களை சம்பத்தப்பட்ட அணிகள் அறிவித்திருந்தன.
தற்போது சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற நிலையில், புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளன. பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல், லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 12, 13 ஆம் தேதிகளில் இந்த ஏலம் நடைபெறும் என்றும் பெங்களூருவில் ஏலம் நடக்கும் என்றும் ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் இந்தியாவில் நடக்குமா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்குமா? என்பது இப்போதே சொல்ல இயலாது என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.









