முக்கியச் செய்திகள் விளையாட்டு

பிரித்வி ஷா, ஷிகர் தவான் அதிரடி; சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி!

பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல் அணி வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட்டனர். டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், பாப் டுபிளிஸ்சிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அவர்களையடுத்து களமிறங்கிய மொயீன் அலியும், சுரேஷ் ரெய்னாவும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மொயீன் அலி 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரையடுத்து, அம்பத்தி ராயுடு ரெய்னாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்கும்போது அம்பத்தி ராயுடு 23 ரன்னிலும் அவரையடுத்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் ரெய்னாவும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் சென்னை பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுகளை நாளா புறமும் சிதறடித்தனர். இவர்களின் வலுவான பார்ட்னர்ஷிப்பில் அணியின் ஸ்கோர் 138 ரன்கள் இருக்கும்போது பிரித்வி ஷா 72 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரையடுத்து அணி கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கி தவான் அடித்து ஆட நல்ல பார்டனர்ஷிப் அமைத்து கொடுத்தார். அணியின் ஸ்கோர் 167 ஆக இருக்கும் போது தவான் 85 ரன்கள் எடுதத நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியாக 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 190 ரன்கள் விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. 54 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய ஷிகர் தவானுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

Advertisement:

Related posts

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ விவகாரம்; உதயநிதி ட்வீட்!

Karthick

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

Jeba

”வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கினேன்”- நடராஜன்!

Jayapriya