முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி ஜிப்மரில் வரும் 15ம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு மூடல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், வரும் 15ஆம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படாது, என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் முதல் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், வரும் 15ஆம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படாது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கப்படும் வெளி நோயாளிகள் பிரிவு, வரும் 15 ஆம் தேதி முதல், முழுமையாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும், என்றும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதால், தொற்றை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், இவ்வாறு முடிவு எடுக்கபட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான வெளிநோயாளிகள் தினமும் ஜிப்மர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!

Gayathri Venkatesan

’கே.வி.ஆனந்த் மறைவு அதிர்ச்சியளிக்கிறது’: ரஜினிகாந்த் ட்வீட்

Karthick

சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளை திருடும் கும்பல்!

L.Renuga Devi