மாத்திரை அட்டையில் அழைப்பிதழ்; எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!

மாத்திரை அட்டை பின்பக்க வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள வெவ்வேறு தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. அவர்கள்…

மாத்திரை அட்டை பின்பக்க வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள வெவ்வேறு தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. அவர்கள் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் அந்த துறை சார்ந்து தங்களின் அழைப்பிதழை வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அந்த மாத்திரைக்கு எழில் வசந்தா எனப் பெயரிட்ட அந்த ஜோடி, மாத்திரை எங்கு உருவாக்கப்பட்டது யாரால் உருவாக்கப்பட்டது எந்த இடத்தில் உருவாக்கப்பட்டது என அனைத்து விவரங்களையும் அதில் வரிசைப்படுத்தியுள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தங்களின் திருமணம் மற்றும் வரவேற்பு சார்ந்த அனைத்து விவரங்களையும் அவர்கள் அதில் கொடுத்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘குட்டிக் கரணம் போட்ட குட்டி யானை!’

பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ள இந்த அழைப்பிதழை சமூக வலைத்தள பக்கத்தில் பலரும் பகிர்ந்து தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில் எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவறாமல் வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவுக்குச் சிலர், எல்லாம் சரி! மாத்திரை அட்டையில் யூஸ் பை தேதி எங்கே என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.