இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மாநில சட்ட- ஒழுங்கு குழு மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ‘பறவை’ எனும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய பெருநகர காவல் ஆணையர், பறவை திட்டத்தை வடிவமைப்பதற்கு முன்பாக இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும், சிறார்களை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவதற்காக சென்னை காவல்துறை தரப்பில் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சென்னையில் 157 கிளைகள் சென்னையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: “கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை காயம்”
இதனை தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி, பி.என்.பிரகாஷ், இந்தியாவில் உள்ள 20 சதவீத இளம் தலமுறையினரை நாம் காப்பாற்றவில்லை என்றால் இந்தியாவும் உக்ரைன்போல மாறிவிடும் என தெரிவித்தார். வடிவேலு, சந்தானம் போல ஜெலன்ஸ்கியும் ஒரு காமெடி நடிகர் என்றாலும், இளம் வயதில் அதிபரான அவர், போரை எதிர்கொண்டு வருகிறார் என குறிப்பிட்டார்.
மேலும், உலகம் எப்போது நியாயமாக நடந்து கொள்ளாது எனக்கூறிய அவர், அநியாயங்கள் நிறைந்துள்ள உலகத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சிறைக்கு வருபவர்களை நல்வழியில் நடத்தவே பறவை திடடம் கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








