கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை காயம்

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர்கள் முனியசாமி – முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமி இரண்டாவது…

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர்கள் முனியசாமி – முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமி இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தாய் மற்றும் குழந்தை இருவரும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அண்மைச் செய்தி: “கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு”

இந்நிலையில், நேற்று குழந்தை வைக்கப்பட்டிருந்த கட்டில் உடைந்துள்ளது. இதில், கீழே விழுந்த குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனைகளின் சேதமடைந்துள்ள கட்டில் உள்ளிட்ட உபகரணங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.