உள்நாட்டு விமான நிலையங்களில், காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை – தமிழ்நாடு நாடார் சங்கம்

உள்நாட்டு விமான நிலையங்களில், காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைத்தல், உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 1-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு நாடார் சங்கம் அறிவித்துள்ளது.…

உள்நாட்டு விமான நிலையங்களில், காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைத்தல், உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 1-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு நாடார் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை மதுரவாயலில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்நாட்டு விமான நிலையங்களில் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைத்தல், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டுதல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: “இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆய்வு – பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்”

மேலும் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏப்ரல் ஒன்றாம் தேதி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தை முற்றுகையிட போவதாக தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்தார். இப்போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடார் சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என முத்து ரமேஷ் கூறினார்.
மேலும், இப்போராட்டத்திற்கு நாடார் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு, ஆதரவு அளிக்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.