முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் அரசுப்பள்ளிக்குள் புகுந்த ஆசாமி ஒருவர், ஆசிரியையை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வழக்கம் போல பள்ளிக்கு பணிக்குச் சென்ற ஆசிரியை சித்ராதேவி அங்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் எனும் ஆசாமி போதையில் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் அறைந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளார்.


இந்த சம்பவம் நடந்த போது பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் சம்பவ இடத்திலிருந்துள்ளனர். பின்னர் அங்கு வந்தவர்கள் சித்திரவேலை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

இது தொடர்பாக ஆசிரியை சித்ராதேவி வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வடகாடு போலீசார் சித்திரைவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த ஆசாமி ஆசிரியையை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டின் முக்கிய நகரங்களில் தற்கொலை தாக்குதல்: அல் கொய்தா அமைப்பு மிரட்டல்

Web Editor

அதிமுகவிற்கு தற்காலிக அலுவலகமா ? இபிஎஸ் முடிவு என்ன?

Web Editor

மியான்மர் நாட்டில் உள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் – வைகோ

Web Editor