முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

திரிஷாவை தொடர்ந்து ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய நடிகர் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரப் பெயரை தனது ட்விட்டரில் பக்கத்தில் ‘குந்தவை’ என நடிகை திரிஷா பெயர் மாற்றியுள்ளதைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமும் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என மாற்றியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தின் புரோமோஷன் பணிகளில்  படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் வசனத்தைப் பகிர்ந்திருந்தார். நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குந்தவை’ என பெயர் மாற்றியுள்ளார். இந்நிலையில் திரிஷாவை தொடர்ந்து நடிகர் விக்ரமும் தனது ட்விட்டர் கணக்கில் ‘ஆதித்த கரிகாலன்’ என பெயர் மாற்றம் செய்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

G SaravanaKumar

3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

EZHILARASAN D

உலக கின்னஸ் சாதனை படைத்த ‘தேசியக்கொடி’

Mohan Dass