இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி 8-வது நாளாக இன்று திருவனந்தபுரத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் தற்போது எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, கடந்த 11-ம் தேதியில் இருந்து கேரளாவில் நடைபயணத்தை தொடங்கினார்.

கேரளாவில் மொத்தம் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், இன்று 8-வது நாளான நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது. ராகுல்காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பது, முதியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது, சமூக ஆர்வலர்களுடன் கலந்து பேசுவது என ராகுல்காந்தியும் தனக்கே உரிதான பழக்கத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
-இரா.நம்பிராஜன்







