பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு காரணமாக மொட்டை அடிக்க முடியாமல் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்த வசதியாக கட்டணமின்றி மொட்டை அடிக்கப்படுகிறது. இலவச மொட்டை அடிப்பதற்கு திருக்கோவில் சார்பில் முக்கிய இடங்களில் முடி காணிக்கை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக இணைய சேவை மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இன்று காலையிலேயே இணைய சேவை பாதிக்கப்பட்டதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக மொட்டை அடிக்க டிக்கெட் பெற முடியாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து, இணையசேவை சரி செய்யப்பட்டு, மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டது. இதுபோன்ற நேரத்தில், பழைய முறைப்படி டிக்கெட் வழங்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







