கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

கள்ளக்காதலுடன் தனிமையில் இருப்பதை கண்ட தனது குழந்தையின் கையை பிடித்து இழுத்ததில் கை முறிவு ஏற்பட்டதையடுத்து அந்த தாயை போலீசார் கைது செய்தனர்.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் தமிழரசி. இவருக்கும் கபிலன்…

கள்ளக்காதலுடன் தனிமையில் இருப்பதை கண்ட தனது குழந்தையின் கையை பிடித்து இழுத்ததில் கை முறிவு ஏற்பட்டதையடுத்து அந்த தாயை போலீசார் கைது செய்தனர். 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் தமிழரசி. இவருக்கும் கபிலன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தமிழரசிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் கள்ள
தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கள்ள தொடர்பின் காரணமாக சிவா அடிக்கடி
தமிழரசியின் வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு இரண்டரை வயது
பெண் குழந்தை இடையுறாக இருந்ததால் கொடூர தாய் தமிழரசி பலமுறை குழந்தையை
பிரம்பாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் சிவா தமிழரசியின் வீட்டிற்கு வந்து தமிழரசியுடன் தனிமையில்
இருந்துள்ளார். அப்பொழுது குழந்தை இடையூறாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தாய் தமிழரசி கள்ள தொடர்பிற்கு இடையூறாக இருக்கும் குழந்தையின் கையை ஆத்திரத்தில் பலமாக பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் குழந்தைக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல் குழந்தைகள் நலகுழுவிற்கு தெரியவரவே அவர்கள் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் தாய் தமிழரசியை கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ள தொடர்பிற்கு இடையூறாக இருந்த பெற்ற குழந்தையின் கையை முறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.