கேரளாவில் தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களை அவமதித்து, ரயிலிலிருந்து நடுவழியில் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலாவது தேசிய ஓப்பன் ஜம் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த சக்தி மகேந்திரன், பொற்கோ கணேஷ், பிரியன், வீராங்கனைகள் பவித்ரா பாலன், இஷா ஆகிய ஐந்து பேர் சென்றனர். போட்டியில், பவித்ரா தங்க பதக்கமும் சக்தி மகேந்திரன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதைத் தொடர்ந்து ஐந்து பேரும் நேற்று சேலம் திரும்புவதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளனர். அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் சுஜாதா, விளையாட்டு உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை எனக் கூறி வீரர்களை வலுக்கட்டாயமாக ரயிலிலிருந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கொல்லம் ரயில் நிலைய அதிகாரியிடம் தங்களுக்கு நேர்ந்த அவமரியாதை மற்றும் துன்புறுத்தல் குறித்தும் டிக்கெட் பரிசோதகர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








