27.8 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க அதிமுக – திமுக இடையே கடும் போட்டி நிலவுவதால் நகராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியின் 27 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 10 இடங்களையும், அமமுக 5 இடங்களையும், திமுக 5 ஐந்து இடங்களையும், காங்கிரஸ் ஆறு இடங்களையும் பெற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக -காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களைப் பெற்றுள்ளதால், தலைவர் பதவியை பிடிக்க எதிரணியில் உள்ள சிலரை இழுக்கவும், சுயேட்சையின் ஆதரவை பெறவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. பதவியேற்ற கையோடு அதிமுக உறுப்பினர்கள் 10 பேர்களும், அமமுக உறுபபினர்கள் 5 பேர்களும் சொகுசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading