மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பாளர் பரிந்துரை பட்டியலை அளிக்கும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் நகராட்சியில்…

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பாளர் பரிந்துரை பட்டியலை அளிக்கும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் நகராட்சியில் 2360 இடங்களையும், பேரூராட்சிகளில் 4388 இடங்களையும் பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியது.

இதனைத் தொடர்ந்து மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் என ஆயிரத்து 298 பதவிகளுக்கு வரும் மார்ச் 4-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தலைமைப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பரிந்துரைப் பட்டியலை அளிக்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே திமுக கூட்டணி கட்சியினரும் தலைமைப் பொறுப்புகளுக்கான எதிர்பார்ப்பு பட்டியலை திமுகவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்றவர்களை சந்திக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்களின் கருத்துகளையும் கேட்க உள்ளார் எனவும், அதன் தொடர்ச்சியாக வேட்பாளர்களை இறுதி செய்வார் எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.