‘தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்’ – கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரம், பணம், கூட்டணி மற்றும் ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரம், பணம், கூட்டணி மற்றும் ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது, நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்கள் என்ற கோரிக்கையை ஏற்று தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும், பல இடங்களில் 50 சதவீதத்திற்கு குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளதாகவும், கள்ள ஓட்டுகளைக் கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்தத் தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள் எனவும் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ்நாட்டில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாக கூறியுள்ள அவர்,

அண்மைச் செய்தி: மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

https://twitter.com/ikamalhaasan/status/1496376453843533825

தங்களைப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது எனவும், தன்னுடைய எஞ்சிய வாழ்க்கை தமிழ்நாடு மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன்பு அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், இடைக்கால வெற்றி, தோல்விகள் தங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை என்றும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.